ரோயல் கல்லூரி தமிழ்ப் பிரிவின் திடீர் வீழ்ச்சி
அக்டோபர் 23, 2026
ரோயல் கல்லூரி புதிய நெருக்கடியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மை: திட்டமிட்ட இனப் பாகுபாடா அல்லது திறமையற்ற நிர்வாகமா?
இலங்கையின் அரச கல்வி அமைப்பின் மகுடக் கல்லாகக் கருதப்படும் கொழும்பு ரோயல் கல்லூரி, அதன் 191 வருட பாரம்பரியத்தை சிதைக்கும் புதிய சர்ச்சையின் மையத்தில் உள்ளது. பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கு நேரடியாக அனுப்பப்பட்ட ஒரு உத்தியோகபூர்வ முறைப்பாட்டில் தற்போதைய அதிபர் அத்துல விஜேவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் பாடசாலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழிப் பிரிவை வேண்டுமென்றே அழிக்கும் முயற்சி இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முறையற்ற விதத்தில் மாணலர்கள் பாடசாலைக்குச் சேர்க்கப்படும் நடைமுறைகள், மாணவர்களின் பாடசாலை அனுமதியில் பாரபட்சமான நேர்காணல் நடைமுறைகள் மற்றும் வகுப்பறை வளங்களைத் திடீரென அகற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் இந்த முன்னணித் தேசிய பாடசாலையில் ஒன்றில் நிலவும் நிர்வாகச் சீரழிவை எடுத்துக்காட்டுகிறது.
*சிறுபான்மை மாணவர்களை வெளியேற்றும் திட்டமிட்ட செயலா?*
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சமர்ப்பித்துள்ள விரிவான ஆவணங்களின்படி, அதிபர் அத்துல விஜேவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் தற்போதைய உயர்தர (A/L) மாணவர்களுக்கான அனுமதியில், தகுதிவாய்ந்த தமிழ் வழி மற்றும் தமிழ் பேசும் விண்ணப்பதாரர்கள் முன்னோருபோதுமில்லாத வகையில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
*திட்டமிட்ட புறக்கணிப்பு:* உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளுக்கு 5A திறமைச் சித்திகள் மற்றும் வர்த்தக மற்றும் கலைப் பிரிவுகளுக்கு 3A திறமைச் சித்திகள் போன்ற அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்த பல தமிழ் மாணவர்களுக்கு நேர்காணல் அழைப்பு கூட வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பக்கச்சார்பான நேர்காணல் குழு*: நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட சொற்ப மாணவர்களை பரிசீலித்த நேர்காணல் குழு நியமிக்கப்பட்ட விதமும் அக்குழுவில் இடம்பெற்றோரும் நீண்டகாலப் பாடசாலை நெறிமுறைகளை மீறியுள்ளது. தமிழ் மொழிமூல மாணவர்களை மதிப்பிடுவதற்காக இந்த அதிபர் பெரும்பான்மை சிங்களவர்களைக் கொண்ட நேர்காணல் குழுக்களை நியமித்ததாகப் பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக பலவீனமான காரணங்களைக் கூறி பல மாணவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
*சடுதியான எண்ணிக்கை வீழ்ச்சி*: வரலாற்று ரீதியாக, தமிழ் உயர்தரப் பிரிவின் உயிரியல், கணிதம், வர்த்தகம் மற்றும் கலைப் பிரிவுகள் அனைத்திலும் வருடந்தோரும் சுமார் 100 முதல் 120 புதிய மாணவர்கள் முன்னைய வருடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போதைய அதிபரின் நிர்வாகத்தின் கீழ், அந்த எண்ணிக்கை 41 மாணவர்களுக்கும் குறைவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது (உயிரியலில் 12, கணிதத்தில் 17, மற்றும் வர்த்தகம்/கலைகளில் 12).
*வகுப்பறைகள், இருக்கை வசதிகளில் குறைப்பு: கட்டாய இடப்பெயர்வு*
இந்த முறைப்பாட்டில் உள்ள மிக ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தமிழ் மொழிமூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வகுப்பறைகள் பௌதீக ரீதியாக அகற்றப்பட்டிருப்பதாகும்.
முன்பு தமிழ் மொழிமூல வகுப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட கற்றல் சூழல்கள் பறிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் முறையான பௌதீக வசதிகள் அல்லது தங்களது படிப்பை மேற்கொள்ளத் தேவையான தனிப்பட்ட கதிரை, மேசை வசதிகள் இல்லாமல் தவிப்பதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நடவடிக்கை பாடசாலைச் சமூகத்தினரிடையே கடுமையான சீற்றத்தைத் தூண்டியுள்ளதுடன், அதிபர் அத்துல விஜேவர்தன மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அத்துடன் பின்வரும் முக்கியமான கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகப் பெற்றோர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்:
* அடிப்படை நிர்வாகத் திறமைக்காகக் காத்திருக்கும் அதேவேளை, தமிழ் மொழிமூல மாணவர்கள் மர நிழலில் படிக்க வேண்டும் என்று இந்த அதிபரின் நிர்வாகம் எதிர்பார்க்கிறதா?
* இது முழுமையான மேலாதிக்க அலட்சியமா, அல்லது தமிழ் பிரிவை முற்றிலுமாக ஒழிக்கும் திட்டமிட்ட கொள்கையா?
*திட்டமிட்ட இனப் பாகுபாடா அல்லது திறமையின்மையா?*
இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவசர எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்கிறது: அது கொழும்பின் முன்னணி தேசியப் பாடசாலைகளில் இருந்து சிறுபான்மை மொழிப் பிரிவுகள் அகற்றப்படும் அபாயமாகும். இனம், மொழி மற்றும் மதம் கடந்த சம உரிமைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் இனப் பாகுபாடின்மை ஆகிய வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த ஒரு அரசுக்கு, ரோயல் கல்லூரியில் இடம்பெறும் இந்த அவல நிலை ஒரு முக்கியமான சோதனையாக அமைகிறது.
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சு மற்றும் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு முறையீடு செய்துள்ளதுடன்; இந்த இனப் பாகுபாட்டு நடைமுறைகளை உடனடியாக முடக்குமாறும், அகற்றப்பட்ட பௌதீக வகுப்பறைகளை மீண்டும் வழங்குமாறும், அதிபர் அத்துல விஜேவர்தனவின் தலைமைத்துவம் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை உடனடியாகத் தொடங்குமாறும் முறையிட்டுள்ளனர்.
இது ஒரு கருத்தியல் நிகழ்ச்சி நிரலால் தூண்டப்பட்டதா அல்லது பேரழிவுகரமான நிர்வாக தவறான மேலாண்மையால் ஆனதா என்றாலும், நாட்டின் கல்வி ஒருமைப்பாட்டிற்கு நிரந்தர சேதம் ஏற்படுவதற்கு முன்பு ரோயல் கல்லூரியின் தற்போதைய நிலைக்கு உடனடி, தீர்க்கமான தலையீடு தேவைப்படுகிறது.

Comments
Post a Comment