5 ஆம் வகுப்பு அனைத்துப் பெற்றோருக்கும் ஒரு அன்பான அறிவிப்பு
மிக விரைவில் உங்கள் பிள்ளைகளை இருமொழித் தேர்வுப் பரீட்சைக்கு அனுப்ப வேண்டும். இதன் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றி உங்களுக்கு நன்கு தெளிவுப்படுத்துவதே எங்கள் முயற்சி. நிர்வாகம் உங்களை இனி இருளில் வைத்திருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இங்குள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து நீங்கள் அவர்களை விட அதிகமாக அறிந்திருக்க வேண்டும். அவர்கள் உங்களை "கட்டுப்படுத்தும்" ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். 5 ஆண்டுகளாக குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய ஒரே குழுவாக நாங்கள் இதைச் சொல்கிறோம். எங்கள் வரலாற்றுப் போராட்டம் இல்லையென்றால், வருடத்திற்கு 135 பிள்ளைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் பெரும்பாலோர் பணம் மற்றும் தெரிந்தவர்களின் உதவியுடன் பின் (முறையற்ற )கதவு வழியாக நுழைந்தவர்கள்! 5 ஆண்டுகளில் 135 இலிருந்து 324 ஆக அதிகரிக்க முடிந்ததையிட்டு நாங்கள் சந்தோஷம் அடைகிறோம். . இருப்பினும், இது போதுமானதாக இல்லை . எனவே, இருமொழி கற்க விரும்பும் ஒவ்வொரு பிள்ளையினதும் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம்.
கடந்த திங்கட்கிழமை (11) அமைச்சின் இருமொழிக்குப் பொறுப்பான திருமதி நிமாலி பதுரலியாவைச் சந்தித்து, ரோயல் கல்லூரியில் இருமொழி கற்க விரும்பும் ஒவ்வொரு பிள்ளைகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை விளக்கினோம். அந்தக் கூட்டத்தின் சாராம்சம் பின்வருமாறு.
1) இந்த விஷயத்தில் சமீபத்திய சுற்றறிக்கையைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவும், அதன் பிரதியை எங்களுக்கு வழங்கவும் அவர் முன்வதார்.
2) இது தொடர்பான முழுப் பொறுப்பும் அதிபரிடம் இருப்பதாகவும், பாடசாலையின் தேவை குறித்து அமைச்சின் (structural committee) கட்டமைப்புக் குழுவிடம் அவர் தெரிவித்து அதன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவர் எங்களிடம் தெரிவித்தார்.
3) இவ் விடயத்தில் பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று அவர் கடுமையாகக் கூறினார். பெற்றோரின் செல்வாக்கை யாரும் புறக்கணிக்க முடியாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
4) கடும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களை வழங்க அமைச்சகத்தால் முடியாததால், எந்தவொரு பாடசாலைக்கும் தேவையான ஆசிரியர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றும், பாடசாலை நிதியை அதற்காகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார் (தற்போது SDS நிலையான வைப்புத்தொகையில் 1,100 லட்சம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!).
5) புதிய சுற்றறிக்கை தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது, மேலும் இந்த தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் (தேர்வு தரநிலைகள் மற்றும் கடந்த கால வினாத்தாள்களை DPயிடம் கேளுங்கள் - மோசடி செய்யும் கல்வி நிறுவனங்கள்(Tuition) தடையின்றி தங்கள் தொழிலைத் தொடர இவை மறைக்கப்படுகின்றன)
நாங்கள் முடிந்தவரை செல்லவேண்டிய தூரத்திற்கு வந்துவிட்டோம். உங்கள் பிள்ளை தனக்கு விருப்பமான மொழியில் கற்றுக்கொள்வது அவரது அடிப்படை உரிமை. அதைப் பாதுகாக்க வேண்டியது நாம் அல்ல - பெற்றோர்கள்!
I will support
ReplyDelete